Dhoni: தோனி எப்படி கேப்டன் ஆனார் தெரியுமா? - ரவி சாஸ்திரி சொல்லும் ரகசியம்!

MS Dhoni: 2007ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி எப்படி இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆனார் என்பதை சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது ரவி சாஸ்திரி கூறியிருந்தார். 

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 03:30 PM IST
  • 2007ஆம் ஆண்டில் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
  • அவர் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் ஆவார்.
  • தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
Dhoni: தோனி எப்படி கேப்டன் ஆனார் தெரியுமா? - ரவி சாஸ்திரி சொல்லும் ரகசியம்! title=

How MS Dhoni Became Indian Captain: கிரிக்கெட் உலகில் மூன்று வெவ்வேறு ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய ஒரே கேப்டன், மகேந்திர சிங் தோனி மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததுதான். தோனியின் தலைமையின் கீழ், இந்தியா ஐசிசி டி20 உலகக்கோப்பையை 2007ஆம் ஆண்டிலும், 50 ஓவர் உலகக்கோப்பையை 2011ஆம் ஆண்டிலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2013ஆம் ஆண்டிலும் வென்றது. 

2007இல்...

இதுதவிர, 2009ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை கோப்பையை வென்றுகொடுத்தார். இவர் 2020ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது, அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார், இந்த தொடரே அவரின் கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மகேந்திர சிங் தோனி குறித்து ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, 2007ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி எப்படி இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆனார் என்பதை சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது ரவி சாஸ்திரி கூறியிருந்தார். 

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் அணியில் இவனுக்கு இடமில்லைன்னா வேற யாருக்கு? ரவி சாஸ்திரி ஆருடம்

2007ஆம் ஆண்டில், ரவி சாஸ்திரி இந்திய அணியின் மேலாளராகவும் இருந்தார் என்று சொல்லுங்கள். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறுகையில்,"2007இல் நான் இந்திய அணியின் மேலாளராக இருந்தபோதும், திலீப் வெங்சர்க்கார் அணி தேர்வாளராக இருந்தபோதும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பயிற்சியில் ராகுல் டிராவிட் காயம் அடைந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது திலீப் வெங்சர்க்கார் என்னிடம் தோனி பற்றி கேட்டதற்கு, 'இவருக்கு கேப்டனாகும் திறமை இருக்கிறது' என்றேன்.

தோனி எப்படி இந்திய அணியின் கேப்டனானார்?

2007ஆம் ஆண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வீரேந்திர சேவாக் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இல்லை. அந்த நேரத்தில் யுவராஜ் சிங் ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும், ராகுல் டிராவிட் கேப்டனாகவும் இருந்தனர். ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருந்து, யுவராஜ் சிங்கும் கேப்டன் பதவிக்கு போட்டியாளராக இருந்தார், ஆனால் திடீரென்று மகேந்திர சிங் தோனி 2007 டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு பல சவால்கள் இருந்தன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்திற்கான அணியை உருவாக்குவது போன்றது. அந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்ட தோனி, இந்திய அணிக்கு பல வரலாற்று தருணங்களை வழங்கினார். தோனியின் தலைமையில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது" என்றார். 

வாழ்நாள் பலன்

சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று விளையாடியது. கொல்கத்தா உடனான அந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் ஏமாற்றமடையவில்லை. 

சென்னை அணி சார்பில் போட்டி நிறைவடைந்ததும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு நடந்தது. தோனி ரசிகர்களை நோக்கி கையெழுதிடப்பட்ட டென்னிஸ் பந்துகளை அடித்தது, மைதானத்தை சுற்றி வந்து அனைவருரையும் நோக்கி கையசைத்தது, பெவிலியனில் இருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்தது என நேற்று சேப்பாக்கம் சென்ற ரசிகர்கள் தனது வாழ்நாள் பலனை அடைந்திருப்பார்கள் என சமூக வலைதளங்களில் கருத்துகளை காண முடிகிறது.

மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் அதிக ரன் கொடுத்த ஓவர்களை வீசிய பவுலர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News