India vs England: இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடலாம். காயம் காரணமாக முதல் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருந்தார். இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் கோலிக்கு பதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிங்க: Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!
யார் வெளியேற்றப்படுவார்கள்?
முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று இருந்தார். ஆனால் 30 பந்துகளில் அரை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இடத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டால் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சுப்மான் ஓப்பன் செய்யலாம்.
Barabati Stadium, Cuttack
Gearing up for #INDvENG ODI number #TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/YWbjkigQvn
— BCCI (@BCCI) February 8, 2025
வருண் சக்ரவர்த்தி விளையாடுவாரா?
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவை சுழற்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தியது. சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு இங்கிலாந்து டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஒரு 5 விக்கெட்டுகள் உட்பட 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார்.
அக்சர் படேல் தனது சிறப்பான பேட்டிங் மூலம் அரை சதம் அடித்துள்ளார். இதனால் ரிஷப் பந்த் அணிக்குள் வருவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. முதல் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்த கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் தொடர வாய்ப்புள்ளது. தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் ரோஹித் மற்றும் கோலி மீண்டும் பார்மிற்கு வருவார்களா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் உள்ளது. மறுபுறம் இங்கிலாந்து மோசமாக விளையாடி வருகிறது. நல்ல தொடக்கம் இருந்தாலும் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக மார்க் வுட் சேர்க்கப்படலாம்.
2வது ஒருநாள் போட்டிக்கான உத்ததேச இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்/வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: விளையாடாத நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ