IND vs ENG 3rd Test, Playing XI: இங்கிலாந்து டெஸ்ட் அணி பிரண்டன் மெக்கலத்தின் பயிற்சியின் கீழ் செயல்பட தொடங்கியதில் இருந்து தனது அணுகுமுறையையே மொத்தமாக மாற்றிவிட்டது எனலாம். பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பின்னர், இன்னும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புது ரத்தம் பாய்ந்தது எனலாம். மெக்கலம் பயிற்சியாளராக வந்த பின் இங்கிலாந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 தொடர்களை வென்றுள்ளது, 1 தொடரை மட்டுமே இழந்துள்ளது.
அந்த வகையில், தற்போது இந்திய சுற்றுப்பயணத்திலும் இங்கிலாந்து அணி அதன் ஆதிக்கத்தை தொடர்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றாலும், இரண்டாம் போட்டியில் இந்தியா வென்றது தொடரை டிரா செய்தது. இரு அணிகளும் அடுத்த மூன்று போட்டிகளையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்திய பிளேயிங் லெவன்...
இந்திய அணி முதலிரண்டு போட்டிகளுக்கான ஸ்குவாடை மட்டுமே அறிவித்திருந்தது. மற்ற மூன்று போட்டிகளுக்கான ஸ்குவாடை சமீபத்தில் அறிவித்தது. கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் மூன்றாவது போட்டியில் இருந்தும் விளையாடி உள்ளார். ஜடேஜா நாளைய போட்டியில் விளையாடுவார் என கூறப்படுகிறது.
கேஎஸ் பரத்திற்கு பதில் துருவ் ஜூரேல் தற்போது அணிக்குள் நுழைவார் என தெரிகிறது. மேலும், சர்ஃபராஸ் கான், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் ஆகியோரில் நாளை யார் யார் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இறங்கப்போகிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. விராட் கோலி இல்லாத மிடில் ஆர்டர், யாரால் நிலைநிறுத்தப்பட போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. zeenews.india.com/tamil/sports/ind-vs-eng-sarfaraz-khan-to-debut-big-changes-in-team-india-playing-11-488327
இங்கிலாந்தின் புது வியூகம்
இந்திய அணி ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து அணி தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனை இன்றே அறிவித்துள்ளது. எப்போதும் போட்டிக்கு ஒரு நாள் முன்னரே பிளேயிங் லெவனை அறிவிப்பது போன்ற அதிரடி செயல்களை இங்கிலாந்து ஒரு வழக்கமாக வைத்திருக்கிறது. அதன்படி, கடந்த போட்டியில் இருந்து ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே இங்கிலாந்து செய்துள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்களில் லீச் இல்லாத நிலையிலும், ஆப் ஸ்பின்னர் சோயப் பஷீரை நீக்கிவிட்டு வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட்டுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. கடந்த போட்டியில் ரூட் - ரெஹான் அகமது - ஹார்ட்லி - சோயப் பஷீர் ஆகியோர் இருந்தனர். வேகப்பந்துவீச்சாளராக ஆண்டர்சன் மட்டுமே இருந்தார். முதல் முறையாக இந்த தொடரில் 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற காம்பினேஷனில் களமிறங்குகிறது.
இந்தியாவை பின்பற்றும் இங்கிலாந்து
போட்டி நடைபெறும் ராஜ்கோட் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் பெரிதும் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும். குறிப்பாக, முதலிரண்டு நாள்கள். எனவே, இங்கிலாந்து அணி இந்தியாவின் பார்முலாவுக்கே வந்துள்ளது என கூறப்படுகிறது. இந்தியா முதலிரண்டு போட்டிகளிலும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் என்ற காம்பினேஷனிலேயே இறங்கியது குறிப்பிடத்தக்கது.
இதில், ஜடேஜா நாளை அணிக்குள் வரும்போது, குல்தீப் யாதவை வெளியே வைக்குமே, அக்சர் படேலை வெளியே வைக்குமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. அக்சர் படேல் ஆல்-ரவுண்டராக சிறப்பாக விளையாடி வந்தாலும், குல்தீப் யாதவ் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளராக இந்த மைதானத்தில் உபயோகமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓல்லி போப் (துணை கேப்டன்), ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்
மேலும் படிக்க | 'ஜெய்ஸ்வால் விக்கெட்டை இப்படி எடுக்கலாம்' பென் ஸ்டோக்ஸிற்கு வந்த முக்கிய அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ