ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதற்கு காரணம் இது தான் - கம்பீர் விளக்கம்!

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஏன் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அஜித் அகர்கர், கம்பீர் விளக்கம் அளித்துள்ளனர்.   

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2024, 04:45 PM IST
  • ஹர்திக் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
  • அதனால் தான் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கவில்லை.
  • அவருடைய இடத்தில் சூர்யா சிறந்த தேர்வாக இருப்பார்.
ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதற்கு காரணம் இது தான் - கம்பீர் விளக்கம்! title=

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. டி20 அணியின் கேப்டனாக ​​​​ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா டி20யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். இந்நிலையில் அடுத்த கேப்டனாக ஹர்திக் தான் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது. மேலும் டி20 அணியில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் போன்றவர்கள் இடம் பெறவில்லை. அதேசமயம் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்தினார், இதில் 4-1 என வெற்றி பெற்று இருந்தனர். 

மேலும் படிக்க | விராட் கோலியுடன் சண்டையா...? பிரஸ் மீட்டில் போட்டு உடைத்த கௌதம் கம்பீர்!

 

இன்று இந்திய அணி இலங்கைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதற்கு முன்பாக, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஹர்திக்கின் உடற்தகுதி தான் இதற்கு காரணம் என்று அகர்கர் தெரிவித்துள்ளார். “ஹர்திக் எப்போதும் எங்களுக்கு முக்கியமான வீரர். அவரது திறமையை டி20 உலக கோப்பையில் பார்த்து இருப்போம். ஆனால் அவரது உடற்தகுதி அவருக்கு சவாலாக உள்ளது. ஒருநாள் உலக கோப்பையில் அவரது காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே அணிக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய வீரரை நாங்கள் விரும்புகிறோம். ஹர்திக்குக்கு பதிலாக சூர்யா கேப்டனுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்” என்று செய்தியாளர் சந்திப்பில் அகர்கர் கூறினார்.

அணியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் - கம்பீர்

இந்திய அணி வீரர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதே தனது நோக்கம் என்று கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். " நான் மிகவும் வெற்றிகரமான அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளேன். உலக டெஸ்ட் சாம்பியன் சிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் பைனல் வரை சென்றுள்ளனர். பெரிய இடத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது" என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் டி20 அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது சிராஜ்.

இந்தியாவின் ஒருநாள் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல் , கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

மேலும் படிக்க | ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News