India vs Sri Lanka: டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் அவர்களது இடத்தை பிடிக்க பல இளம் வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஒரு இடத்திற்கு 3 முதல் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு இளம் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஷுப்மான் கில் தலைமையில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. அடுத்ததாக ஜூலை 27 ஆம் தேதி இலங்கைகு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும். எனவே இந்த தொடரின் மீது அதிக கவனம் திரும்பியுள்ளது.
டி20 உலக கோப்பை அணியில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் ஜிம்பாப்வே தொடரில் இடம் பெறவில்லை. அதேசமயம், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தேப் சிங் ஆகியோர் இலங்கை தொடரில் இடம் பெற வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் விரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ல் தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, ஆகஸ்ட் 02 முதல் ஒருநாள் தொடர் துவங்க உள்ளது. ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவுடனும், விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுடனும் கம்பீர் எப்படி செயல்பட உள்ளார் என்பதை பார்க்க பலரும் ஆவலுடன் உள்ளனர்.
இலங்கை தொடருக்கான உத்ததேச டி20 இந்திய அணி: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (VC), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா (C), அக்சர் படேல், ரின்கு சிங், குல்தீப் யாதவ், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ