IND vs WI மேற்கிந்த தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா, பந்த் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் தவான் இந்திய அணியின் கேப்டனாக இந்த தொடரை வழிநடத்த உள்ளார். இளம் அணியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. டாஸ் வென்ற மேற்கிந்த தீவுகள் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மூன்று பவுலர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.
A look at our Playing XI for the 1st ODI.
Live - https://t.co/tE4PtTfY9d #WIvIND pic.twitter.com/WuwCljou75
— BCCI (@BCCI) July 22, 2022
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்போகும் ஆல்ரவுண்டர்
இந்திய அணிக்கு தவான் மற்றும் சுப்மான் கில்லின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாகவே அமைந்தது. இருவரும் அரை சதம் கடந்து அணிக்கு ஒரு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 10 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்திருந்தது இந்த ஜோடி. 64 ரன்களில் சுப்மான் கில் எதிர்ப்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு சிறப்பான ஒரு அரை சதத்தை அடித்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் தவான் 97 ரன்களில் ஆட்டம் இழந்து சதத்தை மிஸ் செய்தார். அதன் பிறகு இறங்கிய சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல் சிறிது ரன்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரண்களை குவித்தது இந்திய அணி.
Innings Break!
Half-centuries from Shikhar Dhawan (97), Shubman Gill (64) & Shreyas Iyer (54) propel #TeamIndia to a total of 308/7 on the board.
Scorecard - https://t.co/tE4PtTfY9d #WIvIND pic.twitter.com/GdJBmSKgih
— BCCI (@BCCI) July 22, 2022
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிராஜ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் சிராஜ். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் மற்றும் ஷமர் ப்ரூக்ஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கைல் மேயர்ஸ் 75 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பிராண்டன் கிங் 54 ரன்களும், ப்ரூக்ஸ் 46 ரன்களும், கேப்டன் பூரண் 25 ரன்களும் அடித்தனர். கடைசியில் அகேல் ஹொசைன் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக விளையாட போட்டி மேற்கிந்திய தீவுகள் பக்கம் சென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்த போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
For his captain's knock o @SDhawan25 bags the Player of the Match award as #TeamIndia seal a thrilling win over West Indies in the first ODI.#WIvIND
Scorecardhttps://t.co/tE4PtTx1bd pic.twitter.com/YsM95hV4gD
— BCCI (@BCCI) July 22, 2022
மேலும் படிக்க | ஆசிய கோப்பை போட்டிகள் அதிரடி மாற்றம்! சவுரவ் கங்குலி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ