இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இதனால் தொடரையும் இலக்க நேரிட்டது. இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சமூக வலைதளத்தில் இந்திய அணிக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழக சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்ப்பட்ட காயம் காரணமாக வலை பயிற்ச்சி ஈடுபடவில்லை. ஆனாலும் காயம் குணமடையாததால், அவருக்கு பதிலாக சுழல் பந்து ரவீந்தர் ஜடேஜா சேர்க்கப்பட்டு உள்ளார். ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்தப்படி விளையாடததால், அவருக்கு பதிலாகா ஹனுமா விகாரி சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
Proud moment for Hanuma Vihari as he becomes the 292nd player to represent #TeamIndia in Tests.#ENGvIND pic.twitter.com/M5qh0Y54E0
— BCCI (@BCCI) September 7, 2018
இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கும்.