இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், ஜார்வோ 69 என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விசை, அடிக்கடி பிட்சை ஆக்கிரமிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று ரோஹித் ஷர்மாவின் விக்கெட் வீழ்ந்தபிறகு, இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜார்விஸ் பிட்சிக்கு விளையாட வந்ததால், அஸ்வின் (Ravichandran Ashwin) அவரை இப்படி செய்யாமல் இருக்குமாறு கூறினார்.
அஸ்வின் முதலில் ரோகித், கேப்டன் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரைப் பாராட்டினார். பின்னர் ஜார்வோ பிட்சை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறு ஒரு சிறப்பு குறிப்பை வெளியிட்டார்.
இது குறித்து ட்வீட் செய்த, அஸ்வின், “இன்றைய ஆட்டம் நன்றாக இருந்தது. விராட் கோலி, செதேஷ்வர் புஜாரா மற்றும் ரோஹிட் ஷர்மா ஆகியோர் அருமையான உறுதியைக் காட்டினார்கள். ஜார்வோ, நீங்கள் இப்படி செய்வதை நிறுத்துங்கள்” என்று அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.
Today’s play was as good as it can get with @ImRo45 @cheteshwar1 @imVkohli and Jaarvo showing great intent and grit! Keep going fellas and stop doing this Jaarvo. #IndvsEng
— Mask up and take your vaccine (@ashwinravi99) August 27, 2021
ALSO READ: IND vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் ஏன் சேர்க்கப்படவில்லை? உண்மையை சொன்ன ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா (Rohit Sharma) அவுட் ஆனவுடன் இந்த சம்பவம் நடந்தது. பேட்ஸ்மேனாக உள்ளே நுழைந்த ஜார்விஸ், ஆட முயன்ற போது, பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து அவரை அழைத்துச் சென்ற்னர்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஜார்வோ, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் பீல்டராக மைதானத்துக்குள் நுழைந்தார்.
மூன்றாவது டெஸ்டின் சமீபத்திய ஸ்கோரின் படி, இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 45 ரன்களுடனும் புஜாரா 91 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
புஜாரா (Pujara) சமீப காலங்களில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது இந்திய அணிக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. எனினும், புஜாராவின் ஃபார்ம் பற்றிய பேச்சு டிரெசிங் ரூமில் நடந்ததில்லை என்றும், அவர் அணிக்கு மிக முக்கியமான ஒரு வீரர் என்பது அணிக்கு தெரியும் என்றும் ரோஹித் ஷர்மா கூறினார்.
"உண்மையைச் சொல்வதானால், புஜாராவின் பேட்டிங் பற்றி எதுவும் பேசப்படவில்லை. இது பற்றி மற்றவர்கள்தான் பேசுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அணி டிரஸ்ஸிங் ரூமிற்குள் புஜாராவின் ஃபார்ம் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரது திறமை மற்றும் அனுபவம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆகையால் இதைப் பற்றி அதிகம் விவாதிக்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் ANI கேட்ட கேள்விக்கு ரோஹித் பதிலளித்தார்.
ALSO READ: கிரீசுக்கு வெளியே நிற்கக்கூடாது: நடுவரின் முடிவால் சர்ச்சை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR