உலக கோப்பை 2019 தொடரின் 22-லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 24-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்தார் ரோகித் ஷர்மா!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 24-வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
முன்னதாக நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா இறுதி வரை நின்று விளையாடி 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 நான்குகள் அடங்கும். நடப்பு உலக கோப்பை தொடரில் தனது முதல் சதத்தினை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பூர்த்தி செய்த ரோகித், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
Back to back centuries for HITMAN. What a playerpic.twitter.com/pOh7HVbibi
— BCCI (@BCCI) June 16, 2019
இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா தனது 24-வது ஒருநாள் சத்தை பூர்த்தி செய்ததன் மூலம்., அதிக ஒருநாள் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாம் இடத்தில் 41 சதங்களுடன் விராட் கோலியும் உள்ளனர்.