உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
இதுவரை 8 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள இந்திய - பாகிஸ்தான் விளையாடின போட்டிகளில், இந்திய அணி 7 முறையும், பாகிஸ்தான் அணி ஒரு முறையும் வென்றுள்ளது. கடைசியாக இந்த இரு அணிகளும் மார்ச் 2016ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் சந்தித்தன, இந்த போட்டியில் இந்தியா 16 ஓவர்களில் 119 டார்கெட்டை அடித்து வெற்றி பெற்றது. ஆஷிஷ் நெஹ்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.
With a team boasting incredible depth, #India carry the tag as one of the early #T20WorldCup favourites.
Can Virat Kohli's men live up to the hype? https://t.co/5qvdBScyh2
— ICC (@ICC) October 24, 2021
IND vs PAK இடையேயான T20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி 254 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் சராசரியாக 84.66 ரன்கள் வைத்துள்ளார் கோலி. கோலிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் சோயாப் மாலிக் 164 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி இதுவரை ஆட்டம் இலக்கவில்லை(78*, 36* & 55*).
The world is watching.
Tonight in Dubai, India and Pakistan go toe-to-toe.#INDvPAK | #T20WorldCup pic.twitter.com/ynIzBry0ha
— ICC (@ICC) October 24, 2021
இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அதே உத்வேகத்துடன் களம் இறங்கவுள்ளது. பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி புது இளம் அணியாக விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மேலும் இன்று மதியும் 3.30 க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதுகின்றன.
ALSO READ IND vs PAK: டி20 உலக கோப்பை - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்; யாருக்கு வெற்றி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR