India vs Sri Lanka 1st T20:விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இன்று தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஹர்திக் பாண்டியா மீண்டும் டி20 கேப்டன் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் மழையால் பாதிக்கப்பட்ட டி20 தொடரில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றபோது, ஹர்திக்கின் கேப்டன்சி பெரிதாக பேசப்பட்டது. இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், டி20 போட்டிகள் அதிகம் நடைபெற போவது இல்லை. இருப்பினும், ஹர்திக்கை இந்திய அணியின் முழுநேர கேப்டனாக மாற்ற பிசிசிஐ முயற்சித்து வருகிறது.
மேலும் படிக்க | IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு!
இந்தியா மற்றும் இலங்கை தொடரின் முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 3, 2023 செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது, டாஸ் 6.30 மணிக்கு நடைபெறும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டாரில் இந்தியா vs இலங்கை 1வது டி20யை நேரலையில் பார்க்கலாம்.
A new year
A new start
A new Vice-captain - @surya_14kumar - for the Sri Lanka T20I series TeamIndia had their first practice session here at Wankhede Stadium ahead of the T20I series opener in Mumbai #INDvSL | @mastercardindia pic.twitter.com/qqUifdoDsp— BCCI (@BCCI) January 2, 2023
இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் மாவி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம். , முகேஷ் குமார்
இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, சமிக கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷான, மஹீஷ் தீக்ஷான, மஹீஷ் தீக்ஷான துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், லஹிரு குமார, நுவன் துஷார
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ