நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. முதல் டி20யில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது நியூசிலாந்து. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்ற கணக்கில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாகவே அமைந்தது. அதிரடியாக விளையாடிய கப்டில் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசினார். மறுபுறம் மிட்செல் 28 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். கிலென் பிலிப்ஸ் 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 21 பந்தில் 34 ரன்கள் விளாசினார். 15 ஓவர்களுக்கு 125 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து அணியை கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 20 ஓவர் முடிவில் 153 ரன்களுக்கு சுருட்டினார்.
Superb death bowling from India helps restrict New Zealand to 153/6 after their flying start.
Can the hosts clinch the series today?#INDvNZ | https://t.co/lFuMngLmTs pic.twitter.com/qoWToPP3CS
— ICC (@ICC) November 19, 2021
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பவர் பிளேயில் 4 பவுலர்களை பயன்படுத்தியும் நியூசிலாந்து அணியினால் விக்கெட்டுக்களை எடுக்க முடியவில்லை. இரண்டு பேரும் சிக்ஸர்கள் மழையை பொழிந்தனர். கேஎல் ராகுல் 65 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 55 ரன்களுக்கு வெளியேறினார். கடைசியாக ரிஷப் பண்ட் 18வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
#TeamIndia secure a -wicket victory in the 2nd T20I against New Zealand & take an unassailable lead in the series. #INDvNZ @Paytm
Scorecard https://t.co/9m3WflcL1Y pic.twitter.com/ttqjgFE6mP
— BCCI (@BCCI) November 19, 2021
இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் வென்றது இந்திய அணி. உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை தோற்கடித்ததற்கு பழிதீர்க்கும் விதமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தற்போது வென்றது இந்தியா.
ALSO READ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அழைப்பு வந்தது - ரிக்கி பாண்டிங்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR