India WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் காணும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2021, 07:47 PM IST
  • நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
  • 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
  • விராட் கோலி அணியை வழிநடத்துவார்
India WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு title=

புதுடெல்லி: ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் காணும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது.

டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகளின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும். எட்டு அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.  

கடந்த ஜுலை மாதம் 2019-ஆம் ஆண்டு இந்த போட்டி துவங்கின. இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி வரும் 18ஆம் தேதி, இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறும்.  

WTC இறுதிப் போட்டியில் அணியை கேப்டன் விராட் கோலி (Virat Kohli) வழிநடத்துவார், அஜின்கியா ரஹானே துணைக் கேப்டன். வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். சுழற் பந்து வீச்சாளர்கலான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Read Also | நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியா அணி:

விராட் கோலி
ரோஹித் சர்மா
சுப்மான் கில்
அஜின்கியா ரஹானே
சேதேஷ்வர் புஜாரா
ஹனுமா விஹாரி
ரிஷாப் பந்த்
விருத்திமான் சஹா
ஆர் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
ஜஸ்பிரீத் பும்ரா
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
முகமது சிராஜ்
இஷாந்த் சர்மா

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டாம் பிள்டெல், டிரண்ட் பவுல்ட், டிவோன் கான்வே, கோலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டைலர், நீல் வேகனர், பிஜே வாட்லிங், வில் யங் என நியூசிலாந்து அணியும் இன்னும் இரு நாட்களில் களம் காண தயாராக உள்ளது.

Read Also | நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?

 உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News