இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனிடையில் இன்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருடன் மேலும் 3 பேருக்கு தோற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.
UPDATE - Four members of Team India Support Staff to remain in isolation.
More details here - https://t.co/HDUWL0GrNV #ENGvIND pic.twitter.com/HG77OYRAp2
— BCCI (@BCCI) September 5, 2021
தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. தற்போது RT - PCR சோதனை நடைபெற்றுள்ளது. கொரோனா நெகட்டிவ் வரும்வரை அவர்கள் மற்றவர்களுடன் பேச பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணியில் உள்ள மற்றவர்கள் சோதனையில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே மைதானத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தற்போது நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாடி வருகின்றனர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து அதிகமாக அடிக்கும் பட்சத்தில் இந்திய அணி இன்று முழுவதும் பேட்டிங் செய்து நல்ல முன்னிலையில் பெரும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR