CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்

ஐபிஎல்2023 இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மழை பெய்வதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறாவிட்டால் நாளை நடைபெறும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2023, 12:25 AM IST
  • ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை
  • மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
  • போட்டி நடைபெறாவிட்டால்?
CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான் title=

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி

மிக பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளேஆப் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றால் 5 முறை ஏற்கனவே கோப்பையை வென்று முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியுடனான பட்டியலில் இணையும். குஜராத் அணி கோப்பையை வென்றால் ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறும். ஆனால், அதற்கு வருண பகவான் வழிவிட வேண்டும்.

ரசிகர்கள் கடும் அப்செட்

ஏற்கனவே வானிலை அறிவிப்புகள் கூறியபடி அகமதாபாத்தில் கன மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் இப்போதைக்கு போட்டி தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. மழை விட்டால் மட்டுமே இன்றைய போட்டி நடைபெறும். இல்லையென்றால் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்படும். இதனால் போட்டியை நேரடியாக பார்க்க வந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. பிளைட் டிக்கெட்டெல்லாம் போட்டு வந்து மைதானத்தில் இருக்கும் சமயத்தில் மழை வெளுத்து வாங்குவதால், போட்டி நடக்குமா? நடக்காதா?, போட்டியை கண்டுகளிக்க முடியுமா? என்றெல்லாம் யோசித்து வருகின்றனர்.

ஐபிஎல் விதிமுறை சொல்வது என்ன? 

ஒருவேளை மழை பெய்து போட்டி இன்று நடைபெறாவிட்டால், ரிசர்வ் நாளான நாளை போட்டி நடைபெறும். நாளையும் போட்டி கைவிடப்பட்டால் குஜராத் அணி வென்றதாக அறிவிக்கப்படும். ஏனென்றால், லீக் போட்டிகளின் முடிவில் குஜராத் அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் போட்டி நடைபெறாமல் போனால் சென்னை அணிக்கு ஏமாற்றமாவும், குஜராத் அணிக்கு 2வது முறையாக கோப்பையை வெல்லும் சூழலும் உருவாகும்.

டாஸ் போடப்பட்டு ஒரு பந்துவீசப்பட்டால்கூட, விட்ட இடத்தில் இருந்து நாளை போட்டி தொடங்கும். ஒரு பந்துகூட வீசப்படவில்லை என்றால், 20 ஓவர்களும் நாளை முழுமையாக வீசப்படும். இன்று ஒருவேளை போட்டி 10.10 PM மணிக்குள் தொடங்கினால் முழுமையாக 20 ஓவர்களும் வீசப்படும். 12.26 AM மணிக்கு தொடங்கினால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்படும். சூப்பர் ஓவர் என்றால் 1.20 AM-க்கு தொடங்கும்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News