பிசிசிஐ சில தினங்களுக்கு முன் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக அறிவித்தது. டி20 போட்டிகளில் மட்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று விராட் கோலி கூறிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவரை நீக்கியது பிசிசிஐ. இதன் காரணமாக கோபமடைந்த விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ தலைவர் கங்குலியை சரமாரியாக திட்டி வருகின்றனர்.
ALSO READ | ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விரைவில் ஓய்வு?
தற்போது ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து விராட் கோலியுடன் முன்கூட்டியே ஆலோசனை நடந்தது. விராட் கோலி டி20 போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கு முன்பே பிசிசிஐ அவரிடம் பேசியது. கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் கோலி அதற்கு சம்மதிக்கவில்லை. டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்ற முடிவை பிசிசிஐ விரும்பவில்லை.
இதன் காரணமாக விராட் கோலியை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும், ரோஹித் சர்மாவை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. இந்த அறிவிப்பிற்கு முன் நானும் தேர்வாளர்கள் குழுவும் தனிப்பட்ட முறையில் விராட் கோலியுடன் பேசினோம். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ரோஹித் சர்மாவின் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையை வெளிக்கொண்டு வருவார் என்று நம்புகிறோம்.
ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. தற்போது இந்திய அணி ஒரு வலுவான அணியாக உள்ளது என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வரும் 26ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ | இந்திய அணிக்கு விராட் கோலி தேவை- ரோஹித் சர்மா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR