இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது. 2வாது போட்டியில் இந்திய அணியும், 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 4வது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகக் கருதி இரு அணிகளும் விளையாடியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்தனர். பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 99 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்கம் முதலே இந்தியனின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். ரோகித் சர்மா 127 ரன்களும், கேஎல் ராகுல் 46 ரன்களும், புஜாரா 61, கோலி 44, பன்ட் 50, தாகூர் 60 ரன்கள் அடிக்க இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. 368 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து.
இந்திய பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி வீரர்கள் தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். பும்ரா தனது யார்க்கர் பந்துகளை மீண்டும் இறக்கி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தார். இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் 4 வது டெஸ்டில் வெற்றி பெற்றது.
THIS. IS. IT!
Take a bow, #TeamIndia!
What a fantastic come-from-behind victory this is at The Oval!
We head to Manchester with a 2-1 lead! #ENGvIND
Scorecard https://t.co/OOZebP60Bk pic.twitter.com/zhGtErWhbs
— BCCI (@BCCI) September 6, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR