இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ஜாலியாக பதில் அளித்த அவர், ராகுல் டிராவிட்டைப் போல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கொண்ட பிளயேரை 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு தேடிக் கொண்டிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு டிராவிட் கொடுத்த பதில் வைரலாகியுள்ளது.
இந்தூரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பாக டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் எப்போதும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுக்கான தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. தோனி வந்தபிறகு இந்திய அணியில் சில ஆண்டுகள் அப்படியான தேடலுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவருக்கு மாற்று வீரர்கள் இருந்தபோதும் ஸ்பெஷலிஸ்டாக அவர் இருந்துவிட்டார். இப்போதும் இந்திய அணியில் அப்படியான வீரரை தேடிக் கொண்டிருக்கிறது.
ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனை இந்திய அணி நிர்வாகம் அணிக்குள் கொண்டு வந்தது. அவர்கள் இல்லாதபோது இஷான் கிஷன், பரத்துக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது குறித்து கலந்தாலோசிக்கும்போது, ராகுல், சாம்சன் இல்லாத சூழலில் இஷான் கிஷனை அணிக்குள் கொண்டு வரலாம் என ரோகித் சர்மா முயற்சி எடுத்தார்.
— BCCI (@BCCI) January 23, 2023
ஏனென்றால் அவர் மீது ரோகித் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இப்போது டெஸ்ட் அணியிலும் இஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தன்னுடைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக கோப்பைக்கான வீரர்களை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டோம். இந்திய அணியில் இரண்டு கேப்டன்கள் பற்றி கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது" என கூறினார்.
மேலும் படிக்க | IND vs NZ: ரோஹித், கோலி இனி டி20 அணியில் இல்லை? டிராவிட் சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ