புதுடெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை (வெள்ளிக்கிழமை) விளையாட உள்ளது. இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கவும், புதிய சாதனைகளை படிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. விராட் கோலி பொறுத்தவரை அதிக ரன்கள் எடுத்து ரோஹித் சர்மாவை முந்திக் கொள்ள விரும்புகிறார். அதேநேரத்தில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் என்ற சாதனை முடிக்க முயற்சிப்பார். இந்த இருவரை தவிர ரிஷப் பந்தின் இலக்கு எம்.எஸ் தோனி (MS Dhoni) சாதனை முறியடிப்பதாக இருக்கும். கடைசி மூன்று தொடர்களைப் போல, இந்த முறையும் இந்திய அணியில் தோனி இல்லை.
இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடிக்க முடியும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 போட்டிகளில் தோனி மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் ஆவார். அவர் ஏழு போட்டிகளில் இந்த அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டை (கேட்ச் அல்லது ஸ்டம்பிங்) பறித்துள்ளார். தோனியின் ஐந்து விக்கெட்டில் மூன்று கேட்சுகள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங்ஸ் அடங்கும்.
ரிஷாப் பந்த் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பராக மூன்று கேட்சுகளை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோனியின் சாதனையை முறியடிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் மூன்று பேரை அவுட் செய்தால், அவர் தோனியை முந்திக்கொள்வார்.
மேற்கிந்தியத் தீவுகளைப் பற்றிப் பேசும்போது, இந்தியாவுக்கு எதிரான அவரது மிக வெற்றிகரமான விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் ஆவார். அவர் தோனியைப் போலவே, ஏழு போட்டிகளில் ஐந்து பேரை வேட்டையாடி உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் (இரண்டாவது) மூன்று பேரை திருப்பி அனுப்பிய ஆண்ட்ரே பிளெட்சர் உள்ளார்.
T20 போட்டி அட்டவணை:
முதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6
2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8
3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11
டி-20 இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.
டி-20 அணி மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஹேடன் வால்ஸ் ஜூனியர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.