US Open: இளம் வீரரிடம் தோல்வியை தழுவினார் ரோஜர் பெர்டரர்!

US Open போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெர்டரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2018, 02:02 PM IST

Trending Photos

US Open: இளம் வீரரிடம் தோல்வியை தழுவினார் ரோஜர் பெர்டரர்! title=

US Open போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெர்டரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்!

US Open 2018 டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இத்தொடரில் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெர்டரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். 5 முறை US Open பட்டம் வென்றுள்ள பெர்டரர் தற்போதைய தொடரின் நான்காவது சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் ஜான் மில்மேனிடம் தோல்வியை தழுவினார்.

பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் மில்மேன் 6-3, 5-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் மூத்த வீரர் பெர்டரினை வென்றுள்ளார்.

இளம் வீரரை எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெருவார் என எதிர்பார்த்த நிலையில் பெர்டரர் தனது ரசிகர்களை இத்தோல்வியின் மூலம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம் US Open தொடரில் இருந்து பெர்டரர் வெளியேறினார்.

இப்போட்டியில் வெற்றிப்பெற்ற மில்மேன் காலிறுதிப் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் ஜோக்கோவிச்சை எதிர்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News