WI vs IND, Rohit Sharma: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீதும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது. முதலில் மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீசியது. அதில், இந்திய அணி 438 ரன்களை குவித்தது. விராட் கோலி அதிகபட்சமாக 121 ரன்களை எடுத்தார். ரோஹித் சர்மா 80, ரவிந்திர ஜடேஜா 61, அஸ்வின் 56 ரன்களை எடுத்தனர்.
தொடர்ந்து, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்திருந்தது. மூன்றாம் நாளில் மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைப்பட்ட நிலையில், நேற்றைய நான்காம் நாளில் ஆட்டம் சற்று முன்னதாகவே தொடங்கியது. சற்று நிதானமாக விளையாடி வந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை சிராஜ், முகேஷ் குமார் ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால், 255 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட்டானது. நேற்றைய ஆட்டத்தில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிராஜ் 5 விக்கெட்டுகளை வீசி அசத்தினார்.
அடுத்து உடனடியாக களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆட தயாரானது. அதன்படி ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டி சாதனை படைத்தது. ரோஹித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் அடித்து, தனது அதிவேக டெஸ்ட் அரைசதத்தையும் பதிவு செய்தார். இருவரும் 98 ரன்களை சேர்த்தபோது, ரோஹித் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 38 ரன்களில் வெளியேறி சுப்மன் கில்லுடன், இஷான் கிஷன் களமிறங்கினார். அதிரடி ஆட்டத்திற்காக அவரை ரோஹித் களமிறக்கிய நிலையில், கில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். அவர் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
It's pouring here in Trinidad
While we wait for sunshine, let's throw some light on a couple of stats from today!
Captain @ImRo45 registered his Fastest Test Fifty (inballs) @mdsirajofficial registered his best-ever Test-match figures (
Scorecard pic.twitter.com/sSoKQTzWKg
— BCCI (@BCCI) July 23, 2023
அப்போது, இந்திய அணி 181 எடுத்த நிலையில், டிக்ளர் செய்யப்பட்டது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து பேட்டிங் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 76 ரன்களை எடுத்தது. கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இன்னும் 289 ரன்கள் எடுத்தால் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி என்றும், 8 விக்கெட்கள் எடுத்தால் இந்தியா வெற்றி என்ற நிலையும் உள்ளது.
இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை இரண்டாவது இன்னிங்ஸின் அரைசதம் மூலம் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 முறை இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
29 இரட்டை இலக்க ரன்களை பெற்றிருந்த இலங்கையின் சிறந்த மஹேல ஜெயவர்த்தனாவின் சாதனை ரோஹித் சர்மா நேற்று முறியடித்தார். பெரும்பாலும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் நிபுணராகக் கருதப்படும் ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஒரு சிறந்த பேட்டர் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். ரோஹித் ஷர்மாவின் கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் - 12, 161, 26, 66, 25*, 49, 34, 30, 36, 12*, 83, 21, 19, 59, 11, 127, 29, 31, 24, 23, 24, 24, 24 5, 15, 43, 103, 80, 57 ஆகும்.
மேலும் படிக்க | ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித் இல்லையா? வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ