ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து!

ரோகித் சர்மாவிடம் உள்ள திறமை, விராட் கோலிக்கு இல்லை, ரோஹித் சர்மாவால் ஆட்டத்தை வினாடிகளில் மாற்ற முடியும் என்று பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2022, 11:00 AM IST
  • விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார்.
  • இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது பற்றி அறிவிப்பு வரவில்லை.
  • 3 வருடங்களாக தனது 71 சதத்திற்காக போராடி வருகிறார்.
ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து! title=

ரோஹித் மற்றும் கோலிக்கு இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம். கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக அளவில் இரண்டு பெரிய பேட்டிங் சூப்பர் ஸ்டார்கள். இருப்பினும், இருவரில் ஒருவர் தேர்ந்தெடுப்பது தீவிர ரசிகர்களுக்கு கூட எளிதாக இருந்ததில்லை. கோலிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது, அதே போல ரோஹித் சர்மாவிற்கும் உள்ளது.   சினிமா ஹீரோக்களுக்கு போல, இரண்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். 

மேலும் படிக்க | ஆடாம ஜெயிச்சோமடா! பாகிஸ்தானுடன் விளையாடாமலே வெற்றி பெற்ற இந்தியா!

ஆனால் ஒவ்வொரு முறையும் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால், ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடுகிறது. ரோஹித்துக்கும் கோஹ்லிக்கும் இடையேயான விவாதம் முடிவில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. நிச்சயமாக, கோஹ்லி இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார் மற்றும் பல ஆண்டுகளாக அவரது நிலைத்தன்மையை பிரதிபலிக்கும் அளவுக்கு வேறு எந்த பேட்டரும் வரவில்லை. ஆனால், ரோஹித் தனக்கென ஒரு லீக்கில் இருந்துள்ளார், மேலும் கோஹ்லி செய்யாத பேட்டிங் சாதனைகளை வைத்துள்ளார் (டி20 போட்டிகளில் சதம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம்).

இருப்பினும் பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் இருவரில் சிறந்த பேட்டர் யார் என்று குறிப்பிட்டார்.  "ரோஹித் சர்மாவிடம் இருக்கும் திறமை விராட் கோலிக்கு இல்லை என்று நான் உணர்கிறேன். அவர்கள் இருவரும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ரோஹித் விளையாடும் விதம், அவர் ரீப்ளேயில் பேட்டிங் செய்வது போல் உணர்கிறேன். விராட் கோலி எனக்கு முன்னால் பேட்டிங் செய்தார், ஆனால் ரோஹித்துக்கு கடவுள் நிறைய நேரம் கொடுத்துள்ளார். அவர் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு வீரர்" என்று கூறியுள்ளார்.

இமாம் பல இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  2018 ஆசியக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சதம் அடித்தார், இதனால் இந்தியா 39 ஓவர்களில் 238 ரன்களைக் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு வருடம் கழித்து, இமாம் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 2019 உலகக் கோப்பையில் 140 ரன்கள் எடுத்தார், உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு இந்தியா வெற்றிக்கு வழி வகுத்தது. அதே போட்டியில், கோஹ்லி 85 ரன்களும் எடுத்திருந்தார்.

மேலும் படிக்க | Gujarat Fake IPL: போலி ஐபிஎல் மூலம் ரஷ்ய கும்பலுக்கு மொட்டையடித்த குஜராத் கில்லாடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News