டோனி, கோலி சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் ஷர்மா!

டெல்லியில் நடைபெறவிருக்கும் வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் ஷர்மா, டோனியின் சாதனை ஒன்றை முறியடிப்பார் என தெரிகிறது.

Written by - Mukesh M | Last Updated : Nov 3, 2019, 11:56 AM IST
டோனி, கோலி சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் ஷர்மா! title=

டெல்லியில் நடைபெறவிருக்கும் வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் ஷர்மா, டோனியின் சாதனை ஒன்றை முறியடிப்பார் என தெரிகிறது.

புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவிருக்கும் வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்தியா தனது வெற்றி பயணத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது தனி ஒரு அணிக்கு எதிரான அதிகப்படியான வெற்றி எனும் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாக்கிஸ்தான் - ஜிம்பாபாவே அணிகள் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இப்பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஸ்டாண்ட்-இன் கேப்டன் ரோகித் ஷர்மா ஞாயிற்றுக்கிழமை தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கான முனைப்பில் உள்ளார், ஏனெனில் அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது அவர் தனது 99-வது டி20 போட்டியை விளையாடுகின்றார். இது அதிக எண்ணிக்கையிலான சர்வதேச டி20 போட்டியை விளையாடிய இந்தியர் எனும் பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக இப்பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர ஷிங் டோனி 98 போட்டிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் தனது 99-வது போட்டியை கடக்கும் ரோகித், டோனியின் பெயரினை இப்பட்டியலில் பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ரோகித் ஷர்மா பாகிஸ்தானின் சோயிப் மாலிக் (111), ஷாஹித் அப்ரிடி (99) ஆகியோருக்கு பின்னால் மூன்றாவது இடத்தில்(சர்வதேச அணிகள்) இருப்பார்.

இதேப்போல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவர் டி20 போட்டிகளில் கோலியின் எண்ணிக்கையை விட ஏழு ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளார். தற்போது 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா 2443 ரன்கள் குவித்துள்ளார், விராட் கோலியோ 72 போட்டிகளில் 2450 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு தொடரில் கோலியை ரோகித் முந்தும் பட்சத்தில் இந்த பட்டியலிலும் மாற்றம் நிகழும்.

Trending News