தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

சாலை பாதுகாப்பு உலக தொடரின் 4-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

Last Updated : Mar 12, 2020, 02:35 PM IST
தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு! title=

சாலை பாதுகாப்பு உலக தொடரின் 4-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியும், மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக டேரன் கங்கா 31(32) ரன்கள் குவித்தார். ரிச்சர்ட் பவுள் 30(17) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் பிரைன் லாரா 4(8) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தென்னாப்பிரிக்கா தரப்பில் பவுள் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் கிப்ஸ் 1(4) மற்றும் மோரன் வென் வியுக் 10(14) ரன்களில் வெளியேறி ஆட்டத்தை பரப்பாக்கினர். எனினும் 4-ஆம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாண்டி ரோட்ஸ் 53*(40) மற்றும் ஆல்பின் மார்கல் 54*(30) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி ஆட்டத்தின் 18.3-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டினர். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு உலக தொடர்








அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள்

 

 

இந்தியன் லெஜண்ட்ஸ்

2 2 0 8

 

 

தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ்

1 1 0 4

 

 

இலங்கை லெஜண்ட்ஸ்

2 1 1 4

 

 

ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ்

1 0 1 0

 

 

மேற்கிந்திய லெஜண்ட்ஸ்

2 0 2 0

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது தென்னாப்பிரிக்கா டெஜண்ட்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியன் லெஜண்ட்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் இலங்கை 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி புள்ளிகள் ஏதும் இன்றி 4 மற்றும் 5-ஆம் இடங்களில் உள்ளது.

Trending News