டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-வின் வாழ்க்கை படமாகிறதா?

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-வின் வாழ்க்கை வரலாறு திரைபடமாகிறது என தகவல்கள் வெளியான நிலையில், இச்செய்தியினை சானியா மிர்சா மறுத்துள்ளார்!

Last Updated : May 21, 2018, 04:27 PM IST
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-வின் வாழ்க்கை படமாகிறதா? title=

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-வின் வாழ்க்கை வரலாறு திரைபடமாகிறது என தகவல்கள் வெளியான நிலையில், இச்செய்தியினை சானியா மிர்சா மறுத்துள்ளார்!

இந்தியாவில் பிரந்து பாக்கிஸ்தான் நாட்டின் மருமகளாக சென்ற சானியா மிர்சாவின் வாழ்க்கையினை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இத்திரைப்படத்தினை பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கவுள்ளார் எனவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில் தற்போது சானியா மிர்சா இந்த தகவல்கள் குறித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது... "எனது வாழ்க்கை திரைப்படத்தினை குறித்து இதுவரை யாரும் என்னுடன் தொடர்புக் கொள்ளவில்லை. எனவே இது குறித்த தகவல்கள் எனக்கே இதுவரை அறிவிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.

தற்போது பாக்கிஸ்தானில் தனது காதல் கணவர் மாலிக் உடன் வாழ்ந்து வரும் இந்த 31-வயது வீராங்கனை 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் கருவுற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இவர் தனது காதல் குறித்தும், திருமணத்தினை குறித்தும் தெரிவிக்கையில் இந்திய நாடே கொந்தளித்தது. இந்தியரான ஒருவர் எப்படி எதிரி நாடான பாக்கிஸ்தானியரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என குரல்கள் எழுந்தன. ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியர் தற்போது அமைதியான மற்றும் மகிழ்சியான வாழ்க்கையினை நடத்திவருகின்றனர்.

Trending News