TNPL 2023: சாய் சுதர்சன் முதல் சஞ்சய் யாதவ் வரை; ஏலத்தில் இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்

டிஎன்பில் ஏலத்தில் சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் 21.60 லட்சத்துக்கு கோவை கிங்ஸூக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2023, 05:47 PM IST
TNPL 2023: சாய் சுதர்சன் முதல் சஞ்சய் யாதவ் வரை; ஏலத்தில் இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் title=

TNPL 2023 Auction: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 இரண்டு நாட்கள் ஆட்டம் முடிவடைந்தது. 2 ஆம் நாள் கிரண் ஆகாஷ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். லைகா கோவை கிங்ஸ் அவரை 6.5 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் தமிழ்நாடு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை லைகா கோவை கிங்ஸ் அணி 21.6 லட்சங்களை கொட்டி தங்கள் அணிக்கு ஏலம் எடுத்தது. சகோதரர்கள் சஞ்சய் யாதவ் மற்றும் சோனு யாதவ் ஆகியோரும் நல்ல தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | TNPL Auction: இந்த தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்-பாட்... ஐபிஎல்லை விட அதிக தொகை!

சஞ்சய் யாதவை 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17.6 லட்சத்துக்கு வாங்கியது. ஆல்ரவுண்டர் சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் 15.2 லட்சத்தை கொடுத்து வாங்கியது. ஐபிஎல்லில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் கிஷோர், திருப்பூர் அணிக்கு 13 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த விஜய் சங்கரையும் அணி 10.25 லட்சத்துக்கு வாங்கியது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 6.75 லட்சங்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். மதுரை பாந்தர்ஸ் சுந்தரை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் வருண் சக்கரவர்த்தியை வாங்கியது. 15.95 லட்சதுக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சிவம் சிங்-ஐ ஏலம் எடுத்தது. மதுரைக்கு ரூ.12 லட்சத்திற்குச் ஸ்வப்னில் சிங் சென்றார். இவர்கள் இருவருக்கு இவ்வளவு தொகை கிடைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. எட்டு அணிகள் கொண்ட டிஎன்பில் 7வது சீசன் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | TNPL Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News