மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது வெற்றி பெற்றது. உலகின் தலைச்சிறந்த பினிஷரான தோனி சிறப்பாக விளையாடியது சென்னை அணியைக் கடந்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அவரிடம் இருந்து இப்படியான ஆட்டத்தை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது என்பதால், இப்போட்டிக்குப் பிறகு தோனியை கொண்டாடி வருகின்றனர்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பிரிட்டோரீயஸ் அவுட்டாக சிஎஸ்கே, 5 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பிராவோ 2வது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4 பந்தில் 16 ரன்கள் எடுத்தால் சென்னை வெற்றி என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். தான் சந்தித்த முதல் பந்தை அட்டகாசமாக சிக்சருக்கு பறக்க விட்ட தோனி, அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், 2 பந்துகளில் 6 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது, 5வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் 4 ரன்களும் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸை திரில்லாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார் தோனி.
இதன்மூலம் உலகின் தலைச்சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த அவரை கிரிக்கெட் உலகம் சமூகவலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. அதேநேரத்தில், உனத்கட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் என அவர் விளையாடிய அனைத்து இடங்களிலும் உனத்கட் சிறப்பாக விளையாடவில்லை எனக் கூறும் ரசிகர்கள், உனத்கட்டை நம்பி ரோகித் எப்படி கடைசி ஓவரை கொடுத்தார் என ரோகித்தையும் மும்பை ரசிகர்கள் விளாசுகின்றனர். ’நீ போட்ட ஓவருக்கு என் தலைவன் திட்டு வாங்குறான்டா’ என ரோகித் ரசிகர்களும் சேர்ந்து உதன்கட்டை வறுத்தெடுக்கின்றனர்.
இந்த இடத்தில் அத்திபூத்தாற்போல் ஒரே ஒரு ரசிகர், உனத்கட்டுக்கு சப்போர்ட் செய்து களத்தில் குதித்துள்ளார். அவர் கொடுத்துள்ள விளக்கம் தான் ரசிகர்களால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அப்படி என்ன விளக்கம்? என கேட்கிறீர்களா.
MI and CSK were on 139 after 19 overs.
Jaydev Unadkat got MI and CSK to 155 after 20 overs.#TataIPL2022
— Vinod Ramnath (@NaanumEngineer) April 21, 2022
19வது ஓவர் முடிவில் மும்பை மற்றும் சிஎஸ்கே என இரண்டு அணிகளும் 139 ரன்கள் எடுத்திருந்தன. மும்பை அணிக்காக அப்போது களத்தில் இருந்த உனத்கட், மும்பையை பேட்டிங் மூலம் 155 ரன்கள் எடுக்க உதவினார். சிஎஸ்கே அணியை பவுலிங் மூலம் 155 ரன்கள் எடுக்க உதவியுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது? எனவும் வினவியுள்ளார்.
மேலும் படிக்க | அப்பவே அப்புடி! 2010ல் பொல்லார்ட்டை அவுட் செய்ய தோனி செய்த மேஜிக்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR