புதுடில்லி: விஜய் ஹசாரே டிராபி 2018 தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது, அவர் பிடித்த கேட்ச் பல கேள்விகளை எழுப்பப்பியது.
எம்.ஏ. சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி வீசிய 19 வது ஓவரை வீசினார். அப்பொழுது சந்தீப் அவரை எதிக்கொண்டார். அப்பொழுது முலானி வீசிய பந்தை தடுக்க நினைத்தார் சந்தீப். ஆனால் பந்து பேட்டின் முனையில் பட்டு ரோஹித்தை நோக்கி சென்றது. பந்து தரையை தொடும்நேரத்தில் கேட்ச் பிடித்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுத்தார்.
ஆனால் நடுவரின் தீர்ப்பை பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தவறான முடிவை நடுவர் அறிவித்தார். ஏனென்றால் ரோஹித் கேட்ச் பிடிக்கும் போது அவரது தரையில் பட்டது.
பார்க்க வீடியோ:-
— Mushfiqur Fan (@NaaginDance) October 17, 2018