இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட போட்டியில், விராட் கோலி தனது 25-வது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரோலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகின்றது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்னுடனும், ரகானே 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
Captain Kohli notches his 25th Test ton. One of the finest from King Koh #TeamIndia #AUSvIND pic.twitter.com/LisPQ6pobc
— BCCI (@BCCI) December 16, 2018
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. ரகானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேற, விராட் கோலி - ஹனுமா விஹாரி ஜோடி நிதானமாக விளையாடினர்.
இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இருந்தாலும், நிதானமாக விளையாடிய கோலி இப்போட்டியில் தனது 25-வது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். 214 பந்தில் 11 பவுண்டரியுடன் சதத்தை கோலி பதிவு செய்தார். பின்னர் பெட் கம்மிஸ் வீசிய பந்தில் 123(257) ரன்களுடன் வெளியேறினார்.
விராட் கோலியின் 123(257) ரன்கள் மூலம் நிகழ்ந்த சாதனைகள்...
- ஆஸ்திரேலியா மண்ணில் மிக குறைந்த போட்டிகளில் 1000 டெஸ்ட் ரன்கள் கடந்த வீரர் என்னும் பெருமையினை பெற்றார் கோலி, இதற்கு முன்னதாக இப்பெருமையினை டான் பிராட்மேன் தக்க வைத்திருந்தார்.
- ஆஸ்திரேலியா மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை குவித்த இந்திய வீரர் எனும் பெருமையினையும் கோலி(6) பெற்றார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் இப்பெருமையினை தக்க வைத்திருந்தார்.
- விராட் கோலி, சச்சின் டெண்டுல்கள் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 6 சதம் அடித்த வீரர்கள் ஆவர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா 99 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது. ரிஷாப் பன்ட் 19(33), உமேஷ் யாதவ் 2(10) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இது ஆஸ்திரேலியா ரன்களை விட 66 ரன்கள் குறைவு ஆகும்.