இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த தசாப்தத்தின் 11 உறுப்பினர்களைக் கொண்ட Wisden டி20 சர்வதேச அணியில் இடம்பிடித்துள்ளனர்!
ஆச்சரியம் என்னவென்றால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மஹிந்திரா சிங் தோனி மற்றும் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த அணியில் இடம் பெறுவில்லை. மேலும் அந்த அணிக்கு ஆஸ்திரேலியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமை தாங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மென் இன் ப்ளூவுக்காக இதுவரை விளையாடிய 75 டி20 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 2,633 ரன்கள் குவித்துள்ள கோஹ்லி, அணியில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். கோஹ்லியைப் பற்றி தெரிவித்துள்ள விஸ்டன், கோஹ்லி 3-வது இடத்திற்கு ஒரு சிறந்த வீரர், ஏனெனில் அவர் வேகத்திற்கும் சுழலுக்கும் எதிராக வலுவாகவும் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாகவும் செயல்படுகிறார் என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விஷ்டம் தெரிவிக்கையில்., "உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் கோஹ்லியின் சாதனை மோசமானதாக இருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் அவ்வாறு சொல்ல முடியாது. கோஹ்லியின் சராசரி 53 என்பது தசாப்தத்தில் மிகச் சிறந்ததாகும், மேலும் அவரது நிலைத்தன்மை அவரது இடைவெளியினை சற்று சமரசம் செய்தாலும், அவர் இன்னும் ஒரு நல்ல மதிப்பெண் பெற முடியும் என விஷ்டம் நம்புகிறது." என குறிப்பிட்டுள்ளது.
"வேகம் மற்றும் சுழற்சிக்கு எதிராக வலுவான ஆட்டம், விக்கெட்டுகளுக்கு இடையில் விரைவான செயல்பாடு காரணமாக கோஹ்லி 3-வது இடத்தில் கறமிறங்க ஏற்ற வீரர், ஆரம்ப விக்கெட் இழக்கப்படும்போது தீயை போன்று செயல்படவும், இன்னிங்ஸை வெல்வதற்கான உறுதியினை அளிக்கவும் கோஹ்லி ஒரு சிறந்த வீரர்" என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், பும்ரா, ஜனவரி 2016-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் குறுகிய வடிவத்தில் அறிமுகமானதில் இருந்து 41 டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளரை தங்கள் அணியில் சேர்த்ததில் பெருமை கொள்ளும் விஸ்டம், பும்ரா தனது ஒட்டுமொத்த பொருளாதார வீதமான 6.71-க் கருத்தில் கொண்டு அணியில் இடம் பெற்றுள்ளார், இது டேல் ஸ்டெய்னுக்குப் பின்னால் விரைவான பந்து வீச்சாளர்களிடையே உலகின் இரண்டாவது சிறந்த செயல்பாடு என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விஸ்டம் குறிப்பிடுகையில்., "2016-ஆம் ஆண்டில் அறிமுகமான போதிலும், பும்ராவின் சிறந்த செயல்பாட்டால் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். பும்ராவின் ஒட்டுமொத்த பொருளாதார வீதம் 6.71, விரைவான பந்து வீச்சாளர்களிடையே, டேல் ஸ்டெய்னுக்குப் பின்னால் உலகின் இரண்டாவது சிறந்த செயல்பாட்டினை அவர்பதிவு செய்துள்ளார்." என விஷ்டம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களைத் தவிர, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்களான ஷேன் வாட்சன் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் வில்லி, ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்கள் முகமது நபி மற்றும் ரஷீத் கான், நியூசிலாந்தின் கொலின் மன்ரோ மற்றும் இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோர் விஸ்டனின் டி20 சர்வதேச தசாப்தத்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
விஸ்டனின் தசாப்தத்த முழு டி20 அணி பின்வருமாறு:...
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) (ஆஸ்திரேலியா), கொலின் மன்ரோ (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), முகமது நபி (ஆப்கானிஸ்தான்), டேவிட் வில்லி (இங்கிலாந்து) ), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை).