சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL 2019 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலகலமாக துவங்கிய IPL 2019 தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பெங்களூரு அணி அடுத்தடுத்த தங்கள் அணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
துவக்க வீராக களமிறங்கிய கோலி 6(12) ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர். மறுமுனையில் துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய பார்த்திவ் பட்டேல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29(35) ரன்கள் குவித்தார். எனினும் ஆட்டத்தின் 17.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பெங்களூரு அணி 70 ரன்கள் மட்டுமே குவித்தது.
சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ராம் தாகிர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்தினார்.
இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் காணுகிறது.