இந்திய அணி அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பையை கண் வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற எந்தவொரு ஐசிசி கோப்பைகளையும் இந்தியா வெல்லவில்லை. இந்த தீராத சோகம் அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையிலும் தொடர்ந்தது. தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இது பெரும் சோகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொடுத்தது. இந்த சூழலில் அடுத்த ஐசிசி கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்கான ஆயத்த பணிகளை இந்திய அணி தொடங்கிவிட்டது.
20 ஓவர் உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்திய அணி தரமான அணியை தயார் செய்ய தொடங்கியுள்ளது. அதற்கேற்ப ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை களமிறக்கிய இந்தியா, அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா தொடரிலும் இளம் வீரர்களுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளது. சீனியர் பிளேயர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கவில்லை.
மேலும் படிக்க | உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் அண்மையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தியிருக்கிறது. அப்போது 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மாவின் எதிர்க்காலம் குறித்து கேள்வி எழுப்பியபோது, கேப்டன்ஷிப் குறித்து உறுதியான முடிவை தெரிவித்தால் தன்னுடைய முடிவையும் தெரிவிப்பதாக ரோகித் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு உங்களுக்கு 20 ஓவர் பார்மேட்டில் விளையாட விருப்பமா? என்ற கேள்விக்கு, கேப்டனாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த தயார் என கூறியிருக்கிறார். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவை இப்போதே தெரிவிக்க வேண்டும் என ரோகித் கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பிசிசிஐ, ரோகித் சர்மா 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலியை 20 ஓவர் இந்திய அணியில் எடுப்பது குறித்து பரிசீலிக்கவில்லையாம். இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணியில் ரோகித் மற்றும் விராட் கோலி இருப்பார்களா? என்பது குறித்து தீர்மான முடிவை எடுக்கலாம் என்ற எண்ணத்திலும் பிசிசிஐ இருக்கிறதாம்.
மேலும் படிக்க | IND vs SA: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! மூன்று கேப்டன்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ