புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இருக்கும் டி நடராஜனுக்கு ஐபிஎல் 2020 இன் போது தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை, இது சுனில் கவாஸ்கருக்கு (Sunil Gavaskar) மகிழ்ச்சி அளிக்கவில்லை.
ஐபிஎல் 2020 (IPL 2020) போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக (Sunrisers Hyderabad) விளையாடி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய சர்வதேச அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு (Natarajan) தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை என்பது விவாதங்களை எழுப்பியிருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அனி, ஐபிஎல் 2020 பிளேஆஃப்களில் இடம் பிடித்தது, அங்கு அந்த அணி, டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியிடம் இரண்டாவது தகுதிச் சுற்றில் தோற்றுப்போனது. ஆனால் நடராஜனின் திறமை அனைவருக்கும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
Also Read | தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா?
ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்பு, நடராஜன் தந்தையாகிவிட்டார், மேலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணியில் பெளலராக பேக்-அப்பில் இருந்த நடராஜனுக்கு தந்தைவழி விடுப்பு (Paternity Leave) வழங்கப்படவில்லை. ஸ்போர்ட்ஸ்டாரில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை சாடியிருக்கிறார். மேலும் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதிகள் கடைபிடிக்கப்படுவதையும், கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
டி நடராஜனுக்கு தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை? சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar)பத்தியில் ‘இரட்டைத் தரங்களை’ வெளிப்படுத்துகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில், தந்தைவழி விடுப்பு (Paternity Leave) என்ற சொல் பல ரசிகர்களிடமிருந்து சில கலவையான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது.
2021 ஜனவரி முதல் வாரத்தில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்கும் என்ப்னதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி விளையாட மாட்டார்.
Also Read | T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம்
விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ (BCCI) தந்தைவழி விடுப்பில் (Paternity Leave) கொடுத்திருக்கிறது. முக்கியமான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவில், டிசம்பர் 19 அன்று அடிலெய்ட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை அடுத்து விராட் கோலியின் தந்தைவழி விடுப்பு (Paternity Leave) தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு தற்போது தாற்காலிகமாக அஜிங்க்யா ரஹானேவுக்கு (Ajinkya Rahane) மாற்றப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR