காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 லீக்கில் பாமிர் சல்மி மற்றும் பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த மைதானத்தில் தீடீர் என்று வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் முக்கிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விபத்தில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இதனால் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தியதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் வாராந்திர விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Footage : There have been casualties in the blast at the Kabul international cricket stadium. #Afghanistan pic.twitter.com/wM7qMsVDpR
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) July 29, 2022
மேலும் படிக்க | டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன் கூறுகையில், வெடிகுண்டு வெடித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதில் நான்கு பார்வையாளர்கள் காயமடைந்து உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் கூறினார். மேலும் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
A blast in the international cricket stadium (Kabul) in Afghanistan during ongoing Shpageeza Cricket League. Kamran Ghulam from Pakistan is also playing in the match..
May Allah protect everyone Ameen#SCL2022 #Kabul #Afghanistan pic.twitter.com/l2c78KJKui— Abdullah Suلtan (@ImAbdullahs56) July 29, 2022
ஷ்பஜீசா கிரிக்கெட் லீக்கின் இந்த ஆண்டு அதன் எட்டாவது சீசன் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடைபெறும் முதல் போட்டி ஆகும். இந்த போட்டியில் நாட்டின் தேசிய அணியில் உள்ள பல வீரர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் என்பது ஆப்கானிஸ்தானில் பிரபலமான விளையாட்டாகும், அதன் பல வீரர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கையகப்படுத்தியதில் இருந்து வன்முறை அளவுகள் குறைந்துள்ள நிலையில், ஜிஹாதி இஸ்லாமிய அரசு குழு சமீபத்திய மாதங்களில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கி தாக்குதல்களை நடத்தியது.
மேலும் படிக்க | ’இந்தியாவிடம் கவனம்’ ஆஸ்திரேலிய அணியை எச்சரிக்கும் பாண்டிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ