இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜெய்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று 2வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த சீரிஸை இந்திய அணி வெல்லும். இந்த முயற்சியில் இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ALSO READ பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பதவியை ராஜினாமா செய்த ஆஸ்திரேலிய கேப்டன்!
முதல் டி20 போட்டியில் எளிதாக வெல்ல வேண்டிய இந்திய அணியை நியூஸிலாந்து பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி சிறிது சிரமத்தை கொடுத்தனர். கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நியூஸிலாந்து. முதல் போட்டியில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை சிதறடித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. கடந்த போட்டியில் சொதப்பிய ஷ்ரேயஸ் அய்யர் இந்த போட்டியில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இன்றைய போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இது தோனியின் சொந்த ஊர் என்பதால் போட்டியை காண தோனி மைதானத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி இடம்பெற்றிருந்தார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் , கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட்
நியூசிலாந்து அணி: டிம் சீஃபர்ட், டிம் சவுத்தி , மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், கைல் ஜேமிசன், ட்ரென்ட் போல்ட், இஷ்னேட், ஆடம்.
ALSO READ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அழைப்பு வந்தது - ரிக்கி பாண்டிங்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR