புளோரிடா: விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள் முதல் தரவரிசை இரட்டையர் வீராங்கனை Peng Shuai. இவரை "பல வகையான தொடர்புகள்" மூலம் அடைய பலமுறை முயற்சித்ததாகவும் ஆனால் வெற்றிபெறவில்லை என்றும் WTA தலைவர் கூறினார்.
சீன டென்னிஸ் நட்சத்திரம் (China Tennis Player) அனுப்பிய மின்னஞ்சலின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச பெண்கள் டென்னிஸ் சங்கம் (Women's Tennis Association (WTA)), பாதுகாப்பு கவலைகளையும் முன் வைக்கிறது. எழுப்புகிறது.
பெங் ஷுவாய் காணவில்லை
டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்ட மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (WTA) தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். WTA ஆல் பெறப்பட்ட மின்னஞ்சலில், ஷுவாய் தான் "வீட்டில் ஓய்வெடுக்கிறேன்" என்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு "உண்மையல்ல" என்றும் கூறியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) முன்னாள் அதிகாரி தெரிவித்திருந்தார்.
பெங் ஷுவாய் தொடர்பாக பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கவலையுடன், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
I am devastated and shocked to hear about the news of my peer, Peng Shuai. I hope she is safe and found as soon as possible. This must be investigated and we must not stay silent. Sending love to her and her family during this incredibly difficult time. #whereispengshuai pic.twitter.com/GZG3zLTSC6
— Serena Williams (@serenawilliams) November 18, 2021
இது குறித்து கேள்வி எழுப்பிய, WTA தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் சைமன், புதன்கிழமை அரசாங்க ஊடகங்களில் பகிரப்பட்டு, WTA க்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல், பெங் ஷுவாய் தொடர்பான தனது கவலையை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
ALSO READ | கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா? பரபரப்பு சர்ச்சை
தேதி அல்லது கையொப்பம் இல்லாமல் சீனாவின் அரசு ஊடகம் CGTN ஆல் பகிரப்பட்ட மின்னஞ்சலில், “அனைவருக்கும் வணக்கம், இது பெங் ஷுவாய். WTA இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்திகள் குறித்த, உள்ளடக்கம், உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது சரிபார்க்கப்படவில்லை, அது எனது அனுமதியின்றி வெளியிடப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
“பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உட்பட அந்த வெளியீட்டில் உள்ள செய்திகள் உண்மையல்ல. நான் காணாமல் போகவில்லை, பாதுகாப்பு இல்லாமலும் இல்லை. நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன், அனைத்தும் சரியாகவே இருக்கிறது. என் மீது அக்கறை கொண்டதற்கு மீண்டும் நன்றி. WTA என்னைப் பற்றி மேலும் ஏதேனும் செய்திகளை வெளியிட்டால், அதை என்னிடம் சரிபார்த்து, எனது ஒப்புதலுடன் வெளியிடவும்” என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. #WhereIsPengShuai pic.twitter.com/51qcyDtzLq
— NaomiOsaka大坂なおみ (@naomiosaka) November 16, 2021
“பெங் ஷுவாய் தொடர்பாக சீன அரசு ஊடகம் இன்று வெளியிட்ட அறிக்கை, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்த எனது கவலையை மட்டுமே எழுப்புகிறது. எங்களுக்கு பெங் ஷுவாய் அனுப்பிய மின்னஞ்சலை உண்மையில் எழுதியுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று தெரியவில்லை. ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் (Email published on media) செய்தியை நம்புவது கடினமாக உள்ளது,” என்று சைமன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள் முதல் தரவரிசை இரட்டையர் வீரரான பெங்கை "பல வகையான தொடர்புகள்" மூலம் அடைய பலமுறை முயற்சித்ததாகவும் ஆனால் வெற்றிபெறவில்லை என்றும் சைமன் கூறினார்.
"எந்தவொரு தரப்பில் இருந்தும் வற்புறுத்தல் அல்லது மிரட்டல் இல்லாமல் பெங் ஷுவாய் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்பட வேண்டும்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார். "பாலியல் வன்கொடுமை தொடர்பான அவரது குற்றச்சாட்டு மதிக்கப்பட வேண்டும், முழு வெளிப்படைத்தன்மையுடனும், தணிக்கை இல்லாமலும் அவர் விசாரிக்கப்பட வேண்டும். பெண்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், தணிக்கை செய்யவோ கட்டளையிடவோ கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், முன்னாள் துணைத் தலைவர், ஜாங் கௌலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பெங் ஷுவாய் மிகவும் தைரியமாக வெளியிட்டார். இந்த மாத தொடக்கத்தில் அவர் வெளியிட்ட மிகவும் நீண்ட சமூக ஊடக பதிவில், தான் பல முறை மறுத்த பிறகும், முன்னாள் சிபிசியின் முன்னாள் உயர் அதிகாரி உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக டென்னிஸ் வீராங்கனை தெரிவித்திருந்தார்.
முன்னணி சீன சமூக ஊடக தளமான Weibo இல் அவரது சரிபார்க்கப்பட்ட கணக்கில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவு அகற்றப்பட்டது, மேலும் சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து செய்திகளையும் முடக்கிவிட்டது.
ALSO READ | 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR