அண்ணாமலை கீழ்ப்பாக்கம் போங்க .. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளாசல்

ஜெயலலிதா பற்றி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கீழ்பாக்கத்துக்கு போவது நல்லது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கடுமையாக விளாசியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 08:06 PM IST
அண்ணாமலை கீழ்ப்பாக்கம் போங்க .. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளாசல் title=

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | மகளிர் தினத்திற்கு அடுத்த நாள்... பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்து... வைரலாகும் சித்ரவதை போட்டோ!

ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால், அங்கு நடைபெறும் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும். அண்ணாமலைக்கு என்ன ஆச்சுனு தெரியவில்லை. அவருக்கு மென்டலி பிராப்ளம்னு பேசிக்குறாங்க. என்னோட தாய் 100 மடங்கு, மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என்கிறார். இவரை யார் கேட்டது?. ஓபிஎஸ் அல்லது வேறு யாராவது பாஜகவை பேசினார்களா?. அம்மாவை தவறாக பேசிய விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும். அங்குள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள்.

உங்களை கீழ் பாக்கத்திலோ அல்லது பெங்களூர் நிமான்சிலோ பரிசோதித்துக்கொள்ளுங்கள். ஜெயலலிதா இருந்தபோது பேசியிருந்தால் காணாமல் போயிருப்பீர்கள். மத்தியில் பாஜக வை ஆட்சியில் அமர வைத்தும், இறக்கியவரும் ஜெயலலிதாதான். அண்ணாமலை பண்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு நாவடக்கம் தேவை. நேற்று அதிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெயக்குமார் முதலில் பாஜகவை திட்டியும், கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணி தொடரும் என்கிறார். அனைவரும் அறை மென்டல்கள்..முழு மென்டல்களாக உள்ளனர்.

அண்ணாமலைக்கு கடைசி எச்சரிக்கை. ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பேசினால் இனி வெளியில் நடமாட முடியாது. உள்ளாட்சி, நகர்புறம், சட்டமன்றம், நாடாளுமன்றம், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி டேக்கிட் இட் ஈஸி பாலிசி என்று இருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வார்டிலேயே அவரால் வாக்குகள் பெற முடியவில்லை. ஓபிஎஸ் என்கிற ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் அதிமுக எதிலும் வெற்றி பெற முடியாது என்றார்.

மேலும் படிக்க | பதறவைக்கும் CCTV! தங்கச்சியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News