பழையவர்களை இறக்குவேன் புதியவர்களை ஏற்றுவேன் - அண்ணாமலை அதிரடி

கட்சியில் பழையவர்களை இறக்கினால்தான் புதியவர்களை ஏற்ற முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 23, 2022, 01:59 PM IST
  • சூர்யா சிவாவுக்கு தடை விதித்தார் அண்ணாமலை
  • காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்
  • அண்ணாமலை அதுகுறித்து விளக்கம்
 பழையவர்களை இறக்குவேன் புதியவர்களை ஏற்றுவேன் - அண்ணாமலை அதிரடி title=

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் மீது கை வைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலையின் தலைமையின் கீழே இப்படி நடந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என அண்ணாமலை அறிவித்தார். மேலும் காயத்ரி ரகுராமையும் அண்ணாமலை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அறிக்கை வெளியிட்டார். 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும். பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. 

Surya Siva

தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தமிழக பாஜக பேருந்துபோலதான். பழையவர்களை இறக்கிவிட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும்” என்றார்.

Gayathri

முன்னதாக அண்ணாமலை குறித்து பேசிய காயத்ரி ரகுராம், “பெண்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். நான் கட்சியை களங்கப்படுத்தியதாக தெரியவில்லை. எனது பணியில் நான் உண்மையாகவும், சரியாகவும் இருந்தேன். இதனை மிகவும் உறுதியாக கூறுகிறேன். இது மக்களுக்கும் நன்கு தெரியும். என்னை நீக்கினாலும்கூட தேசத்துக்காகவும், கட்சிக்காகவும் அவர்கள் வேண்டாம் என்று கூறினாலும் தொடர்ந்து பணி செய்வேன்.

பிரமாணர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுகிறார். கட்சியில் எந்த பிராமணரும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார்” என்றார்.

மேலும் படிக்க | மீண்டும் இளைஞரணி செயலாளரானார் உதயநிதி - திமுக அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News