ஆட்டோ கட்டணம் உயரலாம்? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Auto Price in Tamil Nadu: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2022, 03:50 PM IST
  • ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக புகார்.
  • கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை.
  • நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆட்டோ கட்டணம் உயரலாம்? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு title=

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில், எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil Nadu Government

மேலும் படிக்க: நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எஸ்.வி. ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court

மேலும் படிக்க: "எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க" ஆர்எஸ் பாரதியின் சர்ச்சைப் பேச்சு - பாஜகவின் பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News