பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை அரசு வழங்கி வருகிறது. இந்த இலவச பாஸ் மூலமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தினம் தோறும் பள்ளிக்கு பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த இலவச பஸ் பாஸ் வசதி வழங்கப்படுவதில்லை.
தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் எதற்கு என பலர் கூறுகின்றனர், ஆனால் பல பெற்றோர்கள் தங்களின் சக்திக்கு மீறியே பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகிறார்கள். இவர்கள் பணக்காரராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்நிலையில், இந்த விஷயத்தை கருத்தில்கொண்ட ஒரு தனியார் பேருந்து நிறுவனம் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களும் வெறும் 5 ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற புதிய சலுகையை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | விளைநிலங்களில் சிப்காட் கூடாது: விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
இந்த தனியார் பேருந்துகளின் நடவடிக்கைகள் பயணிகள் மற்றும் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு முகசூலிப்பை ஏற்படுத்தினாலும் சமீபமாக தனியார் பேருந்துகள் தங்களின் நடவடிக்கையை மாற்ற முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தான் கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் வெறும் ஐந்து ரூபாய் கட்டணம் என்ற புதிய நடைமுறையை தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கோகுலம் என்ற தனியார் பேருந்து இந்த சலுகை கட்டணத்தை மாணவர்களுக்காக அறிவித்துள்ளது. கோவையில் செயல்படும் கோகுலம் டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான நான்கு பேருந்துகளில் இந்த நடைமுறை பள்ளிகள் திறந்த பின்பு துவங்க உள்ளது. இதில் குறிப்பாக க.க.சாவடி பகுதியில் இருந்து உக்கடம் சுங்கம் புலியகுளம் வழியாக உப்பிலிபாளையம் சென்று மீண்டும் அதே வழியில் செல்லும் எஸ்2 என்ற இந்த தனியார் பேருந்தின் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து ரூபாய் கட்டணம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஆனால் அதே சூழ்நிலையில் , அந்தப் பேருந்துகளில் இயங்கும் நடத்துனர்கள் பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் படியாக பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொள்வதும், கேலி கிண்டல்கள் செய்து விளையாண்டு கொள்வதும் போன்ற நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்
இந்நிலையில், இனி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து பள்ளி மாணவர்களும் வெறும் 5 ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற அசத்தல் சலுகையை ஒரு தனியார் பேருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஒரு பேருந்து நடத்துநர் கூறுகையில், "அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ சீருடை அணிந்து யார் வந்தாலும் அந்த மாணவர்களுக்கு வெறும் 5 ரூபாய்தான் டிக்கெட். அந்த 5 ரூபாயில் பஸ் இயக்கப்படும் எத்தனை கிலோமீட்டருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பயணிக்கலாம்" என்றார்.
இதைக்கிடையில் தனியார் பள்ளி மாணவர்கள் மீதும் அக்கறைக் கொண்டு கோகுலம் பேருந்து நிறுவனம் செய்யும் இந்த சேவையை தமிழக அரசும் கூடிய விரைவில் இதுபோன்ற சலுகைகளை அறிவிக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'திராவிடம் என்ற பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள்' - செங்கோல் பெற்ற ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ