இலங்கை விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

இலங்கைக்கு தமிழ்நாடு அரசு உதவுவது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 05:44 PM IST
  • ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடி
  • இலங்கைக்கு உதவும் தமிழ்நாடு அரசு
 இலங்கை விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை title=

இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய... என்ற திருக்குறளை நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தது. அதேபோன்ற செயலாக தற்போதைய தீர்மானமும் மாறிவிடக்கூடாது.

SriLanka

2009ல், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தும், தமிழ் மக்களை யுத்த வளையத்தில் இருந்து மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் போர் நிறுத்தத்திற்காக திமுக கடுமையாக உழைத்தது என்ற மாயக்கதையை உருவாக்கியதை போல் இந்தத் தீர்மானம் இருக்கக்கூடாது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.

Stalin

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை வழங்கியது.

ஒட்டுமொத்த அடிப்படையில், 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்தியா 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூடுதலாக 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

மேலும் படிக்க | மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்

பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு உதவியாக குறுகிய கால கடனாக இந்தியா 500 பில்லியன் டாலர்கள் வழங்கியது. நவம்பரில் 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும் வழங்கி இருப்பதை கவனத்துக்கு கொண்டுவருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சாலைக்கு விவேக் பெயர்... அரசாணை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு ரசிகர்கள் நன்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News