கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் அதிமுகவை சேர்ந்த பிரத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த், மற்றும் மூதாட்டி துளசியம்மாள் ( 68) ஆகிய 4 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்று பேசும் போது பெண்கள் ஓசி பேருந்தில் பயணிப்பதாக குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் நிலையில் கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் பேசிய வீடியோ வைரல் ஆனா நிலையில் ஓசி பேருந்து என பேசிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு,"விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுப்படுத்த வேண்டிய தேவையில்லை. நான் கலோக்கியலாக (பேச்சுநடையில்) பேசியதை தவறாக மக்கள் புரிந்து கொண்டனர்" என விளக்கமளித்தார்.
மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ