வறட்சி நிவாரண நிதி: மத்திய அரசு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு

Last Updated : Mar 23, 2017, 06:52 PM IST
வறட்சி நிவாரண நிதி: மத்திய அரசு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு title=

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் 

தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது. இதனால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது

இதனையடுத்து மத்திய குழு கடந்த ஜனவரி 22 முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியோ ரூ.1,748.28 கோடி பரிந்துரை செய்துள்ளது.

தமிழக அரசு வறட்சி நிவாரணமாக சுமார் நாற்பதாயிரம் கோடி கேட்ட நிலையில் வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு  ரூ.1748.28 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News