சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில், சேலத்தில் திராவிட விடுதலை கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி மறுத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையம், அனுமதி கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்
தேர்தல் வர உள்ள நிலையில், திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24 ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திராவிட விடுதலை கழகம் திட்டமிட்டிருந்தது.
சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையம்
இந்த கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டு திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் கடந்த பிப் 10 ம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டத்திற்கு அனுமதி மறுத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்துறையினர், சட்டம் ஒழுங்கை சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமென கூறியும் கூட்டம் நடத்த மறுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து.
திராவிட விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அனுமதி மறுத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரியும், காவல்துறையினரின் போக்கை கண்டித்தும், திராவிட விடுதலை கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, அடிப்படை போராட்ட உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திராவிட விடுதலை கழகம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி
இதையடுத்து, காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வரும் மார்ச் 3 ம் தேதி சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் திராவிட விடுதலை கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ