சென்னை ராஜா அண்ணாமலை புரம் சேமியர்ஸ் சாலையில் பிரபல தனியார் ஓட்டல் (செக்மேட்) செயல்பட்டு வருகிறது. இந்த பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் ஓட்டல் கீழ்தளத்தில் உள்ள மதுபானக்கூடத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அதுமட்டுமின்றி மதுபானக்கூடத்தில் பொதுமக்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென ஓட்டலின் முதல் தளம் இடிந்து கீழே விழுந்ததில் ஓட்டல் ஊழியர்கள் உட்பட 5 பேர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நபர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். விபத்து குறித்து ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அபிராமபுரம் போலீஸார் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடர்பாடுகளில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மன்சூர் அலிகான்!
இதில் ஓட்டல் ஊழியர்கள் சென்னையை சேர்ந்த சைக்குளோன் ராஜ்(45) , மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ்(21), திருநங்கை லில்லி(22),
ஆகிய 3 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
மேலும் இடர்பாடுகளில் சிக்கிய மேலும் இருவரை மீட்கும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அவர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சூழ்நிலையில் பாரின் மேலாளர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... மேலும் சம்பவ இடத்தில் பணியாற்றிய 12 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!
முதற்கட்ட விசாரணையில் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மேற்கூரை இடிந்து இதில் மூன்று பேர் பலியானது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து பெருநகர சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சம்பவயிடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை குறித்து ஆய்வு நடத்தினார்.
இதனிடையே, மெட்ரோ நிர்வாகம் இந்த விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் தொடர்பு இல்லை எனவும், இந்த ஹோட்டலுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் 240 மீட்டர் அளவு தொலைவு உள்ளது ஆகவே இந்த விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மெட்ரோ சார்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை முழு விசாரணை செய்த பிறகு இந்த விபத்து தொடர்பான முழு தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கோவையில் வந்து மாட்டிக்கொண்டார் அண்ணாமலை: திமுக எம்பி கனிமொழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ