பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ்

Chennai Big Basket Delivery Boy Arrested: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 9, 2023, 12:19 AM IST
  • சின்மயி புகாரின் எதிரொலி!
  • பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர் கைது
  • இளம்பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர்
பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ் title=

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் மளிகை பொருள் டெலிவரி செய்யும் நபர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சென்னை அருகே பட்டப்பகலில், வீட்டு ஹாலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பிக் பாஸ்கட் டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளியான தகவல்களை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி, கணேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயபால்(35). தனியார் மளிகைப் பொருள்(big basket) டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு சென்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த பெண் மென் பொறியாளர் ஒருவருக்கு ஜெயபால் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் திட்டியதால் கோபமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்கியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெயபால் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயபாலை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக, டெலிவரி ஊழியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ட்விட்டர் மூலம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்த டிவிட்டர் செய்திக்கு, சென்னை காவல் துறை பதிலளித்திருந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருந்தார்.  

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சார்ந்த சிசிடிவி வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த டிவிட்டர் செய்திகளுக்கு சென்னை பெருநகர காவல்துறையினரும் பதிலளித்திருந்தனர். போலீஸார் பதிவிட்ட ட்வீட்டில்,"இந்த விஷயத்தில் பெருநகர சென்னை காவல்துறை உங்களுக்கு உதவும். உங்கள் தொடர்பு எண்ணை மெசேஜில் பகிரவும். எங்கள் குழு உங்களுக்கு உதவும். பயப்பட வேண்டாம். உடனடி உதவிக்கு l00-ஐ அழைக்கவும். இந்த அவசர காலங்களில் Kaaval Uthavi SOS செயலியை பயன்படுத்தவும். copsmlchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நீங்கள் விவரங்களை அனுப்பலாம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த டிவிட்டர் செய்திக்கு காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்மயி ட்வீட் செய்திருந்தார். தற்போது புகாரின் அடிப்படையில் டெலிவர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News