தூத்துக்குடியில் அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிப்பாகவும் புகார்..!

அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகvum மற்றும் எதிர்ப்பாக மகளிர் குழு பெண்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2024, 08:12 PM IST
  • நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருவது அனுகிரஹா
    தொண்டு நிறுவனம்.
  • கடன் உதவி செய்யும் பணியில் ஏராளமான அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும்  எதிப்பாகவும் புகார்..! title=

அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திடம் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில் பணம் கொடுக்காததால் தொண்டு நிறுவனம் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுக்கிரஹ நிறுவனத்தின் மீது மோசடியாக புகார் அளித்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருவது அனுகிரஹா தொண்டு நிறுவனம் இந்த தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த மகளிர் குழு பெண்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம்  ரூபாய் ஒரு லட்சம், ரூபாய் 50,000, ரூபாய் 10,000 என கடன் வழங்கப்பட்டு  ஒரு லட்சத்திற்கு 8000 ரூபாய் கமிஷன் என வாங்கி கடன் வழங்கி வந்துள்ளது. இந்த பணியில் ஏராளமான அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக நாசரேத் திருச்செந்தூர் நெல்லை மாவட்டம் இடையன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவப் பெண்கள் உள்ளிட்டோரிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்த நபர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுக்கிரஹா நிறுவனத்தை தொடர்பு கொண்டு தூத்துக்குடி மாவட்டம் இடைச்சி விளையைச் சேர்ந்த சுந்தரவேல் மற்றும் மூக்குபீரியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் அவர்களுக்கு எந்தவித பணத்தையும் அளிக்க மறுத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் மகளிர் குழு பெண்கள் சிலருடன் அனுகிரஹா தொன்டு நிறுவனம் மகளிர்க்கு கடன் வழங்கிவிட்டு தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | திமுக அரசுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி! பின்னணி தகவல்கள்... 

இதைத் தொடர்ந்து இன்று அனுக்கிரஹா நிறுவனத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த அனுக்கிரஹா நிறுவனம் மூலம் வங்கிகளில்  கடன் வாங்கி உள்ள மீனவ பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுக்கிரஹா நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் ஈடுபட்டு வருவதாகவும், அனுக்கிரஹா நிறுவனம் தங்களுக்கு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கி வருகிறது என்று அவர்கள் எவ்வித தொந்தரவும் செய்யவில்லை என்றும் இதன் காரணமாக நாங்கள் கந்துவட்டி கும்பலிடமிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக அனுக்கிரஹா தொண்டு நிறுவன வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில் அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் முறையாக மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. அந்தத் தொகையை மகளிரும் முறையாக திருப்பி செலுத்தி வருகின்றனர். இதில் சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு நிறுவனம் வழங்காததால் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுக்கிரஹ நிறுவனத்தின் மீது மோசடியாக புகார் அளித்துள்ளனர் என்றார்

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஆதரவாளர்கள் ஆதரவு மகளிர் குழு பெண்கள் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் மீது புகார் அளித்தனர். தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்திற்கு  எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் மகளிர் குழு பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்: தெருக்களை அலங்கரித்த கோலங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News