சென்னை: மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூட்டப்பட்டு உள்ளது. தற்போது மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைகாட்சி மூலம் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணியில் பள்ளிக்க கல்வித்துறை (School Education) ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விரைவில் புதிய பாடப்பகுதிகள் குறித்து தகவல் வெளியிடப்படும்.
சமீபத்தில் வரும் 21 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் 9 ஆகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் (Reopen Schools) திறந்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதற்கான வழிகாட்டுதலையும் மத்திய அரசு வெளியிட்டது. அதில் குறிப்பாக, 6 அடி இடைவெளி, முகக்கவசம், வெவ்வேறு கால கற்றல் அட்டவணைகள் போன்ற முக்கிய வழிகளை பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ALSO READ |
School Reopen: விதிகள் வந்துவிட்டன! பள்ளி திறப்படுமா? இல்லையா? மாநிலத்தின் திட்டம் என்ன?
செப்டம்பர் 21 முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்
இதனையடுத்து, தமிழகத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் (K. A. Sengottaiyan) ஆலோசனை நடத்தி வருகிறார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR