மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் தனியாரை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்று விவசாயிகள் அஞ்சினர். இதனையடுத்து பஞ்சாப், ஹரியானா போன்ற பல இடங்களில் இருந்தும் விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது அதோடு மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ALSO READ வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது விவசாயிகளின் ஒற்றுமைக்கான வெற்றி - சீமான் பாராட்டு
திரைப் பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் சர்வதேச வல்லுநர்கள் என பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர் குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சூழியல் ஆர்வலர் ரிகன்னா போன்ற பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தொடர் போராட்டங்களையடுத்து மத்திய அரசு சிலருக்கு எங்களால் இந்த திட்டத்தின் பயன் குறித்து முழுமையாக விளக்க முடியவில்லை அதனால் இந்த திட்டத்தை திரும்பப் பெறுகிறோம் என்று நேற்று கூறியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது.
இப்போது இந்த சட்டம் எப்படி கொண்டுவரப்பட்டது? எவ்வாறு எதிர்ப்பு கிளம்பியது? என்பதைப் பற்றி பார்ப்போம்!
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பாக மூன்று அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மூன்று சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அதே செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மக்களவையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 20ஆம் தேதியன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பஞ்சாப் விவசாயிகள் இந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். பின்னர் 25-ம் தேதி நாடு முழுவதும் அகில இந்திய கிஷான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவின் அழைப்பின் அடிப்படையில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்து செப்டம்பர் 27ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி தலைநகர் டெல்லியை நோக்கி பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக டெல்லி போலீசார் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்.
மீண்டும் மறுநாள் நவம்பர் 26 ஆம் தேதி போலீசாரின் எதிர்ப்பையும் மீறி விவசாயிகள் தங்கள் பேரணியை தொடர்ந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு போலீசார் தண்ணீரை பீச்சி அடித்து விரட்ட முயன்றனர். இதனைக் கடந்து ஒருவழியாக டெல்லியை அடைந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். நவம்பர் 28-ம் தேதி அமித்ஷா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினார், ஆனால் விவசாயிகள் அதனை மறுத்து விட்டனர். இதனையடுத்து முதற்கட்ட பேச்சுவார்த்தை யாக டிசம்பர் 3ஆம் தேதி மத்திய அரசு அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவ இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடத்தப்பட்டு அதுவும் தோல்வியை தழுவியது. பின்னர் பிறமாநில விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் ஆதரவு தந்து நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது அடுத்ததாக டிசம்பர் 9ஆம் தேதி இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெறக் கோரி ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அடுத்ததாக இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி இந்த மூன்று சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்து, 4 நபர்கள் கொண்ட குழுவை அமைத்தது. குடியரசு தினமான இருபத்தி ஆறாம் தேதி விவசாயிகள் செங்கோட்டை நோக்கி டிராக்டரில் அணிவகுத்துச் சென்று அங்கு வன்முறை ஏற்பட்டு, ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் மார்ச் 6ஆம் தேதி 100 நாட்களை நிறைவு செய்தது. மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹரியானா துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சகுந்தலா பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவசாயிகளின் தொடர் போராட்டம் ஆறு மாத காலத்தை நிறைவு செய்ததால் மே 27-ம் தேதி விவசாயிகள் கருப்பு தினத்தை அனுசரித்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, நேற்றைய தினம் பிரதமர் மோடி காணொளி வாயிலாக 3 வேளாண் சட்டமசோதாக்களையும் திரும்பப் பெறுவதாக கூறி மகிழ்ச்சி செய்தியினை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.
ALSO READ உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR