DMK Reply For TVK Vijay Speech: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kazhagam) என்ற தனிக்கட்சியை தொடங்கினார். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்த விஜய், கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கையையும் முடுக்கிவிட்டார். தொடர்ந்து, கட்சிக்கான கொடி மற்றும் கொடி பாடலையும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில், தங்கள் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், இலக்குகளை அறிவிக்கும் பொருட்டு முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நேற்று (அக். 27) நடத்தினார். லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிகாலை முதலே மாநாட்டுத் திடலில் காத்திருந்து, கடும் வெயிலில் குடிநீருக்கும், உணவுக்கும் அவதிப்பட்டு இருக்கைகள் இல்லாமல் மாலை வரை மாநாட்டை ஆர்வமுடன் நின்றுகொண்டே பார்த்தனர். 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 3-5 லட்சம் வரை தொண்டர்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த எண்ணிக்கை உறுதிசெய்யப்படவில்லை.
கொள்கைகள், செயல்திட்டங்கள்...
தொடர்ந்து மாநாட்டில் தவெக கட்சியின் தலைவர் விஜய்யின் (TVK President Vijay) சுமார் 45 நிமிட உரைதான் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்னரே, கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களை வைத்து மாநாட்டு மேடையிலேயே தங்களின் கொள்கை, செயல் திட்டங்கள், கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், இலக்குகள் ஆகியவை அறிவிக்கப்பட்டன. மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் (Secular Social Justice Ideologies) தான் தமிழக வெற்றிக் கழகத்தின கொள்கைகள் என பிரகடனப்படுத்தினார்.
மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!
கொள்கை எதிரி, அரசியல் எதிரி...
அதுமட்டுமின்றி, பிளவுவாத அரசியலை மேற்கொள்ளும் கட்சி நமக்கு கொள்கை எதிரி என்றும், ஊழல் கலாச்சாரம் கொண்ட கட்சி (கரப்ஷன் கபடதாரிகள்) நமக்கு அரசியல் எதிரி என்றும் விஜய் பேசினார். மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் குறிவைத்து மறைமுகமாக தாக்கி பேசினார். அதிலும் குறிப்பாக 'மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என திமுகவை தாக்கியிருந்தார். குடும்பமாக கொள்ளை அடிக்கும் கூட்டம் எனவும் தாக்கிப் பேசியிருந்தார்.
பாசிசம்... பாயசம்...
அதுமட்டுமின்றி, பாசிசம் பாசிசம் என பாஜகவை திமுக தாக்குவதை குறிப்பிட்ட விஜய், 'அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா... அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது' என காட்டமாக கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி 2026 சட்டப்பேரவை தேர்தலில் தங்களை நாடி வரும் கூட்டணி கட்சிகளுக்கு, ஆட்சியில் அதிகாரப் பங்கீடு இருக்கும் எனவும் முதல் அரசியல் மேடையிலேயே விஜய் பகீரங்கமாக அறிவித்துள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் உண்டாகலாம் எனவும் அரசியல் வல்லுநர்கள் கிசுகிசுக்கின்றனர்.
விஜய்யின் பேச்சு பாஜகவினர் மற்றும் திமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாகி உள்ளது. திமுக - பாஜக அன்டர்கிரவுண்ட் உறவு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் (திமுக) அறிக்கைகள் மூலம் எதிர்க்கிறார்கள் எனவும் விஜய் குற்றஞ்சாட்டினார்.
திமுகவின் ரியாக்சன்
இந்நிலையில், விஜய் பேச்சு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்,"காய்த்த மரம்தான் கல்லடி படும். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் எதிர்ப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம், தக்க பதிலடி கொடுப்போம்" என்றார். மேலும் வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் திமுக தேம்ஸ் நதியை போன்றது என்றும் கூறினார்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
நாள் திரையரங்கிளும்!!
யில் கொஞ்சநாளும் ஓடும்!’வாழ்த்துகள் @actorvijay !!
— R.Rajiv Gand (@rajiv_dmk) October 27, 2024
அதேபோல், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ராஜீவ் காந்தி அவரது X பக்கத்தில்,"உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!. நல்ல படம்... 100 நாள் திரையரங்கிலும், ஓடிடியில் கொஞ்சநாளும் ஓடும்!.. வாழ்த்துகள் விஜய்" என பகடி செய்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ